Bigg Boss 10: ஜுனியர் பாஸை தூக்க ஷாதிகா போட்ட நாடகம்... விளாசிய விஜய் சேதுபதி
VJS Roast Shathika: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி கடந்த நாட்களில் ஜேசன், ஷாந்திகா நடந்து கொண்ட விதத்தினை குறித்து கடுமையாக விளாசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், கடந்த வாரம் அஸ்மிதா, அக்ஷிதா இருவர் வெளியேற்றப்பட்டனர்.
சீசன் ஆரம்பித்து தற்போது 75 நாட்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் மிகவும் வித்தியாசமான டாஸ்க்கினை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக இல்லாத புதிய டாஸ்க்காக உள்ளது.
அது என்னவெனில் பிக்பாஸில் ஒலித்துக் கொண்டிருந்த கம்பீர குரல் இல்லாமல் தற்போது பிக்பாஸ் வீடு சென்று கொண்டிருக்கின்றது. அந்த குரல் மட்டும் தான் இல்லை ஆனால் அதிகாரம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஜுனியர் பாஸாக வினோத், முனியம்மா என்று இருந்து வந்த நிலையில், தற்போது அன்சர் இருந்து வருகின்றார்.
இதில் முனியம்மா தன்னால் இதனை செய்யமுடியாத என்னை வீட்டைவிட்டு அனுப்பிவிடுங்கள் என்று கூறி கண்கலங்கினார்.
அன்சர் பிக்பாஸ் வீட்டில் ஜுனியர் பாஸாக இருக்கும் போது ஷாதிகா அழுது நாடகம் போட்டது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி ஜேசனையும் குறித்து பேசியுள்ளார்.