Bigg Boss 10: பாரபட்சம் பார்த்த லக்ஷ்மி ப்ரியா... கோபத்தில் பொங்கி எழுந்த விஜய் சேதுபதி
Bigg Boss Vijaysethupathi Angry: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற தோசை சண்டையினை வைத்து விஜய் சேதுபதி லக்ஷ்மி ப்ரியாவிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 80 நாட்களைக் கடந்து செல்கின்றது. கடந்த சில தினங்கள் Family Round நடைபெற்றது.
இதில் போட்டியாளர்கள் தங்களது உறவினர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். உணர்வுப்பூர்வமான பாசப்போராட்டத்தினை அவதானித்த பார்வையாளர்களின் கண்கலங்கவும் செய்தது.

இந்த வாரத்தில் நாமினேஷன் மற்றும் டாஸ்க் எதுவும் இல்லை என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தோசை சுடும் போது லக்ஷ்மி ப்ரியா, தன்யா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் லக்ஷ்மி ப்ரியா தன்யாவை பயங்கரமாக பேசியுள்ளார்.
இதனை தற்போது விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மற்றவர்கள் கேட்கும் போது தோசை ஊற்றிக் கொடுத்த நீங்கள் தன்யாவிடம் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு லக்ஷ்மி ப்ரியா அவங்க என்னை ட்ரிகர் பண்ணினார்கள் அதனால் அப்படி பேசியதாக கூறியுள்ளார். ஆனால் லக்ஷ்மி பாரபட்சமாக நடந்து கொண்டது தவறு என்பதை நேருக்கு நேராகவே பேசியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |