Bigg Boss 10: புதிய டாஸ்க்கால் ஏற்பட்ட கலவரம்... சமைக்காத கறியை சாப்பிடும் நிலை
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ள நிலையில், இதனால் ஒரு அணி போட்டியாளர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் இரண்டு அணியினராக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீடும் இரண்டு வீடு போன்று காணப்படுகின்றது. இதில் நேற்றைய தினத்தில் ஒரு அணியினர் வெற்றிபெற்ற நிலையில் சிவப்பு அணியினரின் சமையல் அடுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாப்பாடு இல்லாத சிவப்பு அணியினர் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் உணவுகளை எடுத்து சாப்பிடுகின்றனர்.
ஆதலால் கடுப்பான ஊதா அணியினர் திருடி சாப்பிட்டு விட்டதாக புகார் வைக்கின்றனர். இதற்கு மறுதரப்பு அணியினர் அது சமைக்காமல் சாப்பிடுகின்றோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் சமைக்காத பச்சைக்கறியை எடுத்து வைத்து சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியுள்ளனர். இதனை டிடிஎஃப் வாசன் எடுத்து சாப்பிடுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |