“மக்களின் அன்பை பணத்தால் வாங்க முடியாது” - பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய குமரனின் நெகிழ்ச்சி பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி, போட்டியாளர்களின் சண்டை, வாக்குவாதம் மற்றும் பல்வேறு மோதல்களால் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் குமரனும் பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். குமரனின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த குமரன்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் குமரன் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், “ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் வெளியில் வந்த பிறகுதான் நீங்கள் எனக்கு எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது.

சீரியலில் என்னைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் மட்டுமின்றி, நான் யார் என்றே தெரியாத பலரும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பணம் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். ஆனால், மக்களின் அன்பை மட்டும் பணத்தால் வாங்க முடியாது” என்று குமரன் தெரிவித்துள்ளார்.குமரனின் இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் படுவைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |