நாளை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் சர்ச்சைக்குரிய நபர்! லீக்கான ஓட்டிங் விவரம்...
பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சர்ச்சைக்குரிய போட்டியாளர் அசல் வெளியேறப்போவதாக தகவல் வைரலாகி வருகின்றது.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகின்றது.
இதில் பல மோதல்கள் வெடித்து நிகழ்ச்சியை சூடுப்பிடிக்க வைத்துள்ளது.
இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த வாரம் யார் வெளியேறப்போகின்றார்கள் என்ற பேச்சுக்களும் அடிப்பட ஆரம்பித்துள்ளது.
லீக்கான ஓட்டிங் விவரம்
இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் அசல், ஜனனி, அசீம் உட்பட மொத்தம் 7 பேர் இருக்கின்றனர்.
இதில் தற்போது வந்த தகவலின் படி அசல் குறைவான வாக்குகளை பெற்றுள்ளாராம்.
எனவே இந்த வாரம் அசல் தான் வெளியேற்ற படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிக் பாஸ் வரலாற்றில் அதிக வெறுப்பை சம்பாதித்த போட்டியாளராக அசல் இருக்கின்றார்.
அவர் வெளியேறினால் பெண்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் என்று பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.