இங்க வந்து என்ன கிழிச்ச… வாய மூடு உன்னை அறைஞ்சிடுவேன்! பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஷிவானியின் அம்மா செய்த அதிரடி செயல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இன்று 86வது நாளை எட்டி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் ஷிவானியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பது அவர் பேசிய வார்த்தைகளிலேயே தெரிந்தது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றும் அடைந்ததையும் பார்க்க முடிகிறது. ஷிவானியின் தாயார் கூறும்பொழுது "நீ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன பண்ண... வாய மூடு உன்னை அறைஞ்சிடுவேன்.
அவன் சொல்றதுக்கெல்லாம் நீ ஏன் வழிமொழிந்து கிட்டு இருக்கே... நானா இருக்கேன்னு எதுக்கு சொல்லிட்டு திரியுற... கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்க உனக்கு பெண்களே இல்லையா... நான் வாங்கி கொடுத்ததை அவனுக்கு ஏன் கொடுக்கிற... இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து என்ன கிழிச்சன்னு சொல்லு... சொந்தக்காரங்க அசிங்க அசிங்கமா பேசுறாங்க... இங்கே வந்து நீ ஆயா வேலை பார்த்துகிட்டு இருக்க" என்பது போன்ற அதிரடியான வார்த்தைகளை பேசினார்.
அதே சமயம் சொல்ல வந்ததை தைரியமாக தெளிவாக கூறி முடித்தார். ஆரி மேல் ஷிவானி கோபப்பட்டது தவறு என்றும் சுட்டி காட்டினார். மொத்தத்தில் பலரும் இன்று ஷிவானியின் தாயார் செய்த செயலை பாராட்டி வருகின்றனர்.
அதிலும் ஷிவானிக்கு பதில் அவங்க அம்மா பிக்பாஸுக்கு வந்திருக்கலாம் அதிரடியாக இருந்திருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர். இதேவளை கடந்த வருடம் பிக் பாஸில் லொஸ்லியாவின் தந்தை இப்படி தான் அதிரடி காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.