இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவது யார்? இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இருக்கும் போட்டியாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.
கடந்த வாரம் முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இவருக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு கொடுத்தும் அதனை தக்க வைத்துக்கொள்ள தவறிவிட்டார்.
தற்போது இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் சிபி, இமான் அண்ணாச்சி, அமீர், அபினை, நிரூப், தாமரைச்செல்வி, அக்ஷரா ஆகிய 7 பேருக்கும் மக்கள் தங்களது வாக்குகளை அளித்து கொண்டிருக்கின்றனர்.
இந்த ஓட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அதிக வாக்குகளைப் பெற்ற சிபி முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து அமீர், இமான் அண்ணாச்சி, நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தை பெற்றுள்ளனர். கடைசி மூன்று இடத்தை அக்ஷரா, தாமரைச்செல்வி, அபினை ஆகியோர் பிடித்துள்ளனர்.
எனவே இந்த ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அபினை எப்பொழுதுமே கடைசி நபராக காப்பாற்றப்படுவார்.
ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைந்த நபராக காணப்படும் அபினை, தன்னுடைய இருப்பை பிக்பாஸ் வீட்டில் பதிவு செய்ய தவறி விடுகிறார். இந்நிலையில் இந்த வாரம் அபிநய் அல்லது தாமரை வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.