குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு! Bifilac மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Bifilac HP மாத்திரைகள் செரிமான மண்டலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.
வயிற்றுப் போக்கை சரிசெய்வதுடன் ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் சீராக செயல்பட தேவையான Probiotic நிறைந்தது.
எதற்காக Bifilac HP?
நோயின் தீவிரத்தை குறைக்க ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள், ஒரு சில ஆன்டிபயாடிக்குகள் வயிற்றுப் போக்கினை உண்டாக்கலாம், அந்நேரங்களில் Bifilac HP மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கினை சரிசெய்யும்.
செரிமானம் மண்டலம் தொடர்பான பிரச்சனைகளையும், லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கும், irritable bowel syndrome பிரச்சனை உள்ளவர்களுக்கும் இம் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இரைப்பை குடல் கோளாறுகள், பக்டீரியா தொற்றுகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதன் மூலம், செரிமானத்தை மேம்படுத்தி கெட்ட பக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
ப்ரோபயாடிக்குகள் குறையும் போது, வயிற்றுப்போக்கு செரிமானம் சீராக இல்லாமல் இருத்தல் irritable bowel syndrome பிரச்சனைகள் எழலாம். இதற்கெல்லாம் தீர்வாகிறது Bifilac HP.
எனினும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்வதை கண்டிப்பான முறையில் தவிர்க்க வேண்டும்.
முக்கிய கவனத்திற்கு,
மாத்திரைகள் பயன்படுத்தும் முன்னர் அதிலுள்ளவற்றை மறக்காமல் படித்து பார்க்கவும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை தாண்டி எடுத்துக் கொள்ள வேண்டாம்.
குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |