வறுமையில் விட்டுக்கொடுக்காத தன்மானம்! பாரதியாரின் வெளிவராத சோகங்கள்
தமிழ் கவிதைகளின் தகப்பானாகவும், மீசை கவிஞன், முண்டாசு கவிஞன் என்று பலராலும் அழைக்கப்படும் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்வாம்.
முண்சாசு கவிஞன் பாரதி
பெண் விடுதலை, தீண்டாவை, தமிழர் நலன் என அனைத்திற்காக தனது கவிதையின் மூலம் உண்மையை உரக்கக் கூறியவர் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
இவர் கவிஞர் மட்டுமின்றி, சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிக்கையாசிரியராகவும் இருந்து பல பாடல்களையும் எழுதினார். இன்றும் பள்ளிக் குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் வரும் பாடல்களில் பாரதியாரின் பாடல்கள் மிகவும் முக்கியமானவை.
பெண்கள் தீண்டாமை அகற்ற அன்றே, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்... என்று பெண்ணுரிமைக்காக பாடினார்.
இதே போன்று ஜாதிகள் தலைதூக்கி நிற்கும் இன்றைய காலத்திற்கு அன்றே பாரதியார் எழுதிய பாடல் இன்றும் ஒவ்வொருவரின் மனதில் அழியாமல் இருக்கின்றது. ஆம் சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடியவரும் இவரே.
பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக திறமையைக் கொண்டவர்.
சுப்பையா (எ) சுப்பிரமணியன் என்ற பெயர் கொண்ட இவர், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாள் என்ற தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு சக்தி தாசன், பாரதியார், மகா கவி, முண்டாசு கவிஞன் என பல பெயர்களை பெற்றவர்.
இவரது மனைவியின் பெயர் செல்லம்மாள், இந்த தம்பதிகளுக்கு தங்கம்மாள், சகுந்தலா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இவரின் முக்கிய படைப்பு கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் இன்னும் பல படைப்புகள் உள்ளன.
பாரதிக்கு நடந்த பாலியல் திருமணம்
5 வயதில் தாயை இழந்த இவர் 7 வயதிலிருந்தே கவிதை எழுத ஆரம்பித்தார். இவரது திறமையினை பாராட்டி 11 வயதில் எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கிய நிலையில், இவரது பெயர் சுப்பிரமணிய பாரதி என்று மாறியது.
1897 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி, வெறும் 14 வயது மட்டுமே நிறைவடைந்த இவருக்கு 7 வயது சிறுமியான செல்லம்மாவை திருமணம் செய்து வைத்தனர். இவரின் திருமணத்தின் வலி ஆறாமல் இருந்த நிலையில், பின் நாட்களில் தனது கவிதைகளில் பாலியல் திருமணத்திற்கு எதிராக எழுதினார்.
16 வயதில் தந்தையை இழந்த இவர், பின்பு வறுமைக்கு மத்தியில் காசிக்கு சென்று அலகாபாத் பல்கலை கழகத்தில் சமஸ்கிருத, மற்றும் இந்தி மொழியையும் கற்றார். இவருக்கு ஆங்கிலம் வங்காளம் என பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தான் அறிந்த பொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தெளிவாக பாடியிருந்தார்.
பின்பு எட்டயபுர மன்னரின் அரசவையில் கவிஞராக இருந்த இவரது கவிதைகள் முதன் முதலில் 1903ம் ஆண்டு அச்சிடப்பட்டது. பின்பு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி பின்பு பத்திரிக்கை துணை ஆசிரியராக இருந்தார்.
கைது செய்யப்பட்ட பாரதி
1907 ஆம் ஆண்டில் “இந்தியா” என்னும் வார ஏட்டை எழுதிய இவர், விடுதலை போராட்டத்தில் தீவிராக எழுதினார். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்யாரும் சேருவீர்... என்ற இவரின் கொந்தழிப்பு பிரிட்டிஷ் அரசின் பார்வைக்கு கோபத்தை ஏற்படுத்தி இவரை கைது செய்ய உத்தரவிட்டனர்.
சுமார் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து தனது கொந்தளிப்பை விடாமல் தனது இந்தியா பத்திரிக்கையில் எழுதினார். பின்பு மக்கள் இந்த பத்திரிக்கையை படிக்க தடை விதிக்கப்பட்டது. பின்பு 1918ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர் 34 நாட்கள் சிறையில் இருந்து பின்பு விடுதலை ஆனார்.
தூக்கி எறிந்த யானை
பின்பு தனது மனைவியின் ஊராகிய கடையத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்த இவரை வறுமை சூழ்நது கொண்டது. எட்டயபுர மன்னருக்கு உதவி கேட்டு சீட்டு கவிதை அனுப்பிய நிலையில், இவர் எதிர்பார்த்த உதவி கிடைக்காமல் போனது.
இந்த வறுமையிலும் தனது வீட்டில் இருக்கும் கொஞ்ச அரிசியைக் கூட உலகில் மற்ற உயிரினங்கள் பசியால் இருக்கக்கூடாது என்று குருவிகளுக்கும், காக்கைகளும் இறைத்து விட்டு பசியால் இருந்தார். அப்படிப்பட்ட இவரே... “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கவிதையும் பாடினார்.
வறுமையில் கூட தன்மானத்தோடு தான் வாழ்ந்துள்ளார். தன்னுடைய கை எதற்காகவும் தாழ்ந்து விடக்கூடாது என்று எண்ணிய இவர், பணக்கார நண்பர் ஒருவர் செய்த உதவியை அவர் கொடுத்த தட்டோடு வாங்காமல், அதில் இருந்த பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு தட்டை நீயே வைத்துக்கொள் என்றாராம்.
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமக செல்லும் பார்த்தசாரதி கோவிலுக்கு சென்ற இவரை அங்கிருந்த யானை எதிர்பாராத விதமாக தூக்கி எரிந்துள்ளது.
இதனால் தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியினால் நோய் வாய்ப்பட்டார் பின்பு அதிலிருந்து மீண்ட போதிலும், வயிற்று கடுப்பு நோயினால் பாதிக்கப்பட்டார்.
மருந்துகளை சாப்பிட மறுத்த இவர் தனது 39ம் வயதில், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி இவ்வுலகினை விட்டு சென்றார்.
இவரது இறுதி ஊர்வலத்தில் மிகவும் கொஞ்ச பேர் தான் கலந்து கொண்டது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இவர் எழுதிய பாடல்களை நம்மிடமே விட்டுச் சென்று இன்று கவிதை மூலம் உயிரோடு இருந்து வருகின்றார்.
இவர் வாழ்ந்த எட்டாயபுர வீட்டினை நினைவு இல்லமாக மாற்றி அரசு கவனித்து வரும் நிலையில், அதனை சுற்றுலா செல்பவர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
பாரதியின் சில தத்துவங்கள்
- காயங்கள் குணமாக காலம் காத்திரு கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு
- கவலையும் பயமும் எனக்கு பகைவர்... நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்.. அதனால் மரணத்தை வென்றேன்.. நான் அமரன்
- உங்களில் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும் போது.
- உன்னை மறந்த இதயத்தை நினைத்துக்கொண்டு உன்மை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.
- தமிழன் என்று சொல்லடா.. திலைநிமிர்ந்து நில்லடா...