நிறைவேறாமல் போன பாரதிராஜாவின் கடைசி ஆசை! இறக்க முன் சொன்னது என்ன?
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று(10.06.2026) காலமானார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூன் 10) காலமானார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார். அவரது மகன் மனோஜ் மறைவிலிருந்து பாரதிராஜா உடல்நலம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை கருத்தம்மா இதுபோன்ற படங்கள் பாரதிராஜாவின் சிறப்பு பெற்ற படங்களாகும்.
சுமார் 45 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் பங்காற்றியவர் பாரதிராஜா. இந்த நிலையில் இவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போனது குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பாரதிராஜாவின் கடைசி ஆசை
பாராதிராஜாவிற்கு என்ன தான் வயது மூப்பாக இருந்தாலும் அவர் சினி மீது இருந்த காதலை ஒரு பொழுதும் இழக்கவில்லை.
இதனால் அவர் வயதான காலத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் பல பேட்டிகளில் என்னால் முடிந்தவரை நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

ஒருமுறை நிகழ்ச்சியில் பேசியிருந்த அவர், ”இன்னும் நல்ல கதையை படமாக எடுக்க வேண்டும் நான் பார்த்த வாழ்க்கையை இன்னொரு முறை மக்களிடம் கொண்டு போக வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் தான் எடுத்த படங்கள் மட்டும் போதாது இன்னும் பல கதைகள் இருக்கிறது அதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் கிராமத்து கதைகளை மறந்துவிடக்கூடாது நம்முடைய வேர் அங்கேதான் இருக்கிறது என்றும் பேட்டியில் பேசி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |