சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கிறாரா பாரதிராஜா! மகனால் வெளியான உண்மை
இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மருத்துவ செலவிற்கான பணத்தை கஷ்டப்படுகின்றார் என்ற தகவல் வெளியான நிலையில் அவரது மகன் மனோஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்பு, மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றார்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன்" என்று அவரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இன்று வீடு திரும்பும் பாரதிராஜா
இந்நிலையில் மருத்துவமனை செலவு செய்வதற்கு பணம் இல்லாமல் பாரதிராஜா கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அவரது மகன் மனோஜ் கூறுகையில், எனது அப்பா பாரதிராஜாவின் உடல்நிலை நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.
இதுக்கிடையில், ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை அல்ல ... என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறேன் என்றும் படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கூறுகையில், இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவனைக்கு வந்தார். தற்போது அவர் முழுகுணம் அடைந்திருக்கிறார். இன்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார், தொடர் பரிசோதனை மட்டும் தேவைப்படுகிறது என்றும் மீண்டும் ஐந்து நாட்கள் கழித்து அவர் பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்