பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெண்பா வெளியேறுகின்றாரா? அடுத்த வில்லி யார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடிக்கும் ஃபரீனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை போட்டோவுடன் வெளியிட்ட ஃபரீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உடனே குழந்தை பிறந்துவிட்டால் ஃபரீனா சீரியலில் நடிக்கமாட்டாரே, அடுத்து யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.
இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு ஃபரீனா காணொலி ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை.
முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அப்போது அடுத்த வில்லியும் இவர்தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.