பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த திருப்பங்கள்! அஞ்சலிக்கு நடக்கப்போவது என்ன? வெண்பா வெளியிட்ட உண்மை
பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பாவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, தன்னுடைய அதிரடியான வில்லத்தனத்தால் கண்ணம்மாவை ஒருகைபார்த்து வருகிறார்.
தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையிலும், தொடர்ந்து நடித்து வருகிறார், பிரசவம் நடந்த பின்னரும் நடிப்பு தொடரும் என அதிரடியாக அறிவித்தும் விட்டார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய வெண்பா, ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, பாரதியும், கண்ணம்மாவும் எப்போது சேர்வார்கள் என ரசிகர் ஒருவர் கேட்க “நல்ல ஆளை பார்த்து கேட்டீங்க போங்க” என பதிலளித்துள்ளார்.
மேலும் அஞ்சலிக்கு விஷம் வைத்தது ஏன்? அஞ்சலி இறந்துவிடுவார்களா? என்ற கேள்விக்கு, அதை எப்படி என் வாயால் சொல்வேன் என சோகத்துடன் பதிலளித்துள்ளார்.
இதைப்பார்த்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் வரும் நாட்களில் அஞ்சலிக்கு நடக்கப்போவது என்ன? என இப்போதே கவலையடையத் தொடங்கிவிட்டார்கள்.