கிழிந்த வெண்பாவின் முகத்திரை! அடுத்தடுத்த சாட்சியங்களினால் திடீர் ட்விஸ்ட் - இறுதிக்கட்டத்தில் பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து வருகை தந்த சாட்சியங்களினால் வெண்பாவின் உண்மை முகம் பாரதிக்கு தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த DNA டெஸ்ட்டை பாரதி எடுத்து கண்ணம்மா குற்றமற்றவர் என்பதை தெரிந்து கொள்ளுகின்றார்.
உடனே கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்கின்றார்.
உடைந்த உண்மைகள்
அதை ஏற்று கொள்ள முடியாத வெண்பா அதை பெய் என்று பாரதியை குழப்புகின்றார்.
அடுத்து தான் வெண்பாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கின்றது. கண்ணம்மாவை கொலை செய்வதற்கு வெண்பாவால் நியமிக்கப்பட்ட கூலிப்படை தலைவர் துர்கா அதிரடி எண்ட்ரி கொடுத்திருக்கிறது.
ஒற்றைக் காலுடன், கைப்பிடியின் உதவியுடன் வந்த துர்கா எல்லா உண்மையையும் அனைவர் முன்னிலையிலும் கூறுகின்றார்.
இறுதிக்கட்டத்தில் பாரதி கண்ணம்மா
பின்னர் வெண்பாவின் தனிப்பட்ட பழிவாங்கல் உணர்ச்சிதான் அவர் கண்ணம்மாவை கொல்ல முயல்வதற்கு காரணம் என உணர்ந்து கொண்டு வெண்பாவிடமிருந்து கண்ணம்மாவை காப்பாற்றும் பொறுப்பையே தான் எடுத்துக் கொண்டதாகவும் துர்கா குறிப்பிடுகிறார்.
இப்படி பார்வையாளர்களே எதிர்ப்பார்க்காத அதிரடி ட்விஷ்டுகள் பாரதி கண்ணம்மா தொடரில் இடம்பெற்றுள்ளது.
உண்மை தெரிய போராடிய கண்ணம்மா இதற்கு பிறகு என்ன முடிவு எடுக்க போகின்றார் என்பதே தற்போது ரசிகர்களின் மிக பெரிய கேள்வியாக உள்ளது.