7 மாதம் கர்ப்பமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! வைரலாகும் புகைப்படம்
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் என தான் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஷாக் ஆகியுள்ளது.
பாரதி கண்ணம்மாவில் வெண்பா ரோலில் நடித்து வரும் ஃபரினா ஆசாத் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கின்றனர்.
சீரியலில் நடித்து கொண்டு 7 மாதம் வரை இதை எப்படி மறைத்தார் என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
3 மாதம் இருக்கிறது. குழந்தையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான்கு வருட கனவு நினைவாகி இருக்கிறது. என் உடல் அதிசயம் செய்து உள்ளது என்று பாரதி கண்ணம்மா தொடரின் எதிர் நாயகி வெண்பா பதிவிட்டு உள்ளார்.
ஃபரினாவுக்கு தற்போது அதிகம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவர் சீரியலை விட்டு விலக போகிறாரா என்று தான் அனைவரும் தற்போது கேட்டு வருகிறார்கள்.