வெண்பாவுடன் திருமணம்? பாரதி அம்பலப்படுத்தும் அந்த உண்மை- அதிர்ச்சியில் உறைந்த கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணாம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த சீரியலில் மருத்துவராக இருக்கும் பாரதியை திருமணம் செய்துகொள்ளும் ஏழ்மையான பெண் கண்ணம்மா இருவரும் வெண்பா என்ற பெண்ணின் சூழ்சியால் பிரிந்து விடுகின்றனர். வெண்பா பாரதியை திருமணம் செய்து கொள்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றார்.

பிரிந்து சென்ற கண்ணம்மாவிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்க, கருப்பாக இருக்கும் ஒரு குழந்தையை மாமியார் சௌந்தர்யா எடுத்து வளர்க்கின்றார். தற்போது இரண்டு குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்து வருவதோடு, கண்ணம்மாவின் குழந்தை லெட்சுமி என்பு தெரியாமல் அவர் மீது பாரதிக்கு அதிகமான பாசத்தினை வைத்து வருகின்றார்.

இந்நிலையில் கண்ணம்மாவைக் காண அவரது மாமியார் அவரது வீட்டிற்கு வரவே, உடனே பாரதியும் பின்னே வந்துவிட்டு, தனக்கும் வெண்பாவிற்கு திருமணம் நடைபெற்றுவிட்டது என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் கண்ணம்மா, மாமியார், அவரது சின்ன மகன் என மூன்று பேரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதில் நடக்கப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க, திடீரென லெட்சுமி உள்ளே எண்ட்ரி ஆனால் என்ன நடக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.
