பாரதி கண்ணம்மாவில் திடீர் திருப்பம்: கொடூரமாக மாறிய வெண்பா! லீக்கான காட்சி
பாரதி கண்ணம்மாவில் வில்லி வெண்பா அவரது வேலைக்காரியை கட்டிவைத்து அடிப்பது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபல ரிவியில் பாரதி கண்ணம்மா தான் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. பிரித்து இருந்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்று சேர்வார்களா என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புறம், அவர்களை சேரவே விட கூடாது என்கிற வில்லி வெண்பாவின் வில்லத்தனம் மறுபுறம் என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது பாரதி அவரது மகள் ஹேமாவை கண்ணம்மாவின் வீட்டில் கொண்டு சென்று விட்டிருக்கிறார்.
இதெயெல்லாம் சுத்தமாக பிடிக்காத வெண்பா பாரதியிடம் அது பற்றி கேட்டு கடுப்பேற்றியதால், பாரதி திட்டியுள்ளார்.
பாரதி மற்றும் கண்ணம்மாவை சந்திக்கவிடாமல் செய்ய எதாவது ஐடியா இருந்தால் சொல்லு என வெண்பா அவரது வேலைக்காரியை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் பாரதி கண்னம்மா சீரியல் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது. வெண்பா அவரது வேலைக்காரியை கட்டிவைத்து அடிப்பது போன்று ஒரு காட்சியை எடுத்து இருக்கிறார்கள்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் ஒன்றாக இருக்கும் அவர்கள் நடுவில் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.