பாரதி கண்ணம்மாவில் உடைந்த உண்மை! டி.என்.ஏ எடுக்கப்பட்டதா?
பாரதி கண்ணம்மாவில் ஆபத்தில் இருக்கும் லட்சுமியின் உயிரை காப்பாற்றுகிறார் பாரதி. அதுமட்டுமில்லை ஒரு பாசத்தில் தன்னை அறியாமல் லட்சுமியை கட்டிப்பிடித்து துடிக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
குழந்தைகளுடன் சுற்றுலா
பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்து கொண்ட லட்சுமி, தந்தையுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வந்த நிலையில், சமீபத்தில் குடும்பத்துடன் பள்ளி சுற்றுலா சென்றனர்.
சென்ற இடத்தில் தந்தையையும் தாயையும் சேர்த்து வைக்க லெஷ்மி பல பிளான்களை செய்து வந்த நிலையில், இறுதியில் விபத்தில் சிக்கினார்.
அவரை பாரதி சென்று சாப்பாற்றி கரை சேர்த்து அவருக்கு அவசர உதவி செய்து கண்விழிக்கச் செய்தார். பின்பு சுற்றுலா முடிந்து இந்த சந்தோஷம் மறுபடியும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் வீடு வருகின்றனர்.
மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சினைகள்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க
உண்மையை அறிந்தாரா பாரதி?
இனிவரும் நாட்களில் ப்ரொமோ காட்சி மிகவும் அதிரடியாக வர இருக்கின்றது. கண்ணம்மாவிற்கு தோழியாக இருக்கும் துளசி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மருத்துவரை அவதானித்துவிட்டு அழுதுகொண்டு வெளியே வருகின்றார்.
துளசி வருவதை அவதானித்த பாரதி மருத்துவரிடம் சென்று எதற்காக இந்த பெண் அழுது கொண்டு செல்கிறார் என்று கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் அவரது கணவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்று கூறியுள்ளார்.
உடனே வெளியே வந்த பாரதி யார் துளசியின் கணவர் என்று அவதானிக்க அந்த இடத்தில் வருண் கண்ணில் படுகின்றார். அப்போ கண்ணம்மாவின் குழந்தை யாருடையது என்ற கேள்வி எழுகின்றது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
டி.என்.ஏ எடுக்கப்பட்டதா?
திடீரென லெஷ்மிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்கையில் அவரது ரத்த மாதிரி எடுக்க வேண்டியுள்ளது.
அந்த ரத்த மாதிரியில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ள பாரதி நினைக்க மருத்துவர் ஒருவரிடம் சென்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கொடுத்துள்ளார்.
டி.என்.ஏ பரிசோதனையில் லெட்சுமி தன்னுடைய குழந்தை என்று தெரியவரவே பாரதி பேரதிர்ச்சி ஏற்படுவதாகவும் காட்சிகள் வெளியாகியுள்ளது.