பாரதி கண்ணம்மா சீரியலில் பிக்பாஸ் தாமரை! எதிர்பாராத இன்ப அதிர்ச்சி: வைரல் ப்ரொமோ
பாரதி கண்ணம்மா சீரியலில் பிக்பாஸ் தாமரை எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், குறித்த சீரியல் இத்துடன் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இயக்குனர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதியையும், அவரது குடும்பத்தையும் விட்டு யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனது சொந்த கிராமத்திற்கு கண்ணம்மா தனது அப்பாவுடனும், குழந்தைகளுடனும் சென்றுள்ளார்.
அங்கு பள்ளி ஒன்றில் சமையல் செய்யும் வேலையினை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், வாடகைக்கு வீடு ஒன்றினையும் பார்த்துள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் மகளாக பிக்பாஸ் தாமரை, அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளார். குறித்த சீரியலில் தற்போது பல சம்பவங்கள் அரங்கேறி வருவதால், ரசிகர்களும் அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்து வருகின்றனர்.