கண்ணம்மாவிடம் கையெடுத்து கெஞ்சும் பாரதி: பாரதி கண்ணம்மாவின் அடுத்து வரும் காட்சி லீக்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் படப்பிடிப்பு காட்சி ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது.
குறித்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருவதுடன், டிஆர்பியிலும் டாப்பில் இருக்கின்றது. தற்போது தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மூலமாக தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை கண்ணம்மா அறிந்து கொள்கின்றார்.
இதற்கு பின்னர் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கண்ணம்மாவும், பாரதியும் பேசி கொண்டிருக்கும் காட்சிகள் உள்ளது. முன்னதாக அதே பகுதியில் வெண்பாவிடம், கண்ணம்மா கெஞ்சுவது போல காட்சிகள் வெளியானது.
வெண்பாவிற்கு ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை என தெரிந்ததை வைத்து அவரை மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காட்சி இந்த வாரம் நிச்சயம் ஒளிபரப்பாக இருக்கின்றது.