இடம் மாறிய இரு குழந்தைகள்: உண்மை தெரிந்து கோபத்தில் பாரதி! ப்ரொமோவால் திடீர் திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த வாரம் பயங்கர ரொமான்ஸாக சென்ற நிலையில், இந்த வாரம் கடும் கோபத்தில் நகரவிருக்கின்றது.
நாளுக்கு நாள் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு கதாபாத்திரத்தினை வைத்து தான் மொத்த கதையும் நகர்ந்து வருகின்றது.
பாரதி - கண்ணம்மா இடையே பிறக்கும் இரட்டை குழந்தைகளை வைத்து கதையை நகர்த்தி வருகிறார் இயக்குனர். இதில் ஒரு குழந்தை ஹேமா என்ற பெயரில் பாரதியிடமும், மற்றொரு குழந்தை லஷ்மி என்ற பெயரில் கண்ணம்மாவிடமும் வளர்கிறது.
சமீபத்தில் ஹேமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தாய் பாசத்திற்கு ஏங்கும் அவரை கண்ணம்மா வீட்டிற்கு வருகின்றார். அத்தருணத்தில் பாரதியும் அங்கே மாட்டிக் கொள்கிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கும் தருணத்தில், கண்ணம்மாவின் மகளான லஷ்மி கடும் வயிற்று வலியால் துடிப்பதை பார்த்து மருத்துவமனையில் அனுமதிக்கிறான் பாரதி சில உண்மைகள் தெரிய வருகின்றது.
இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த பாரதி வேகமாக லெட்சுமியை தூக்கிக்கொண்டு தனது வீட்டிற்கு செல்கின்றார். இனி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.