மலச்சிக்கல் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும் விதைகள்- எப்படி சாப்பிடணும் தெரியுமா?
மலச்சிக்கல் பிரச்சினை தற்போது நம்மில் பலருக்கு இருக்கிறது. இந்த பிரச்சனை இருக்கும் ஒருவருக்கு வயிறு சரியாக சுத்தமாகாது. இதனால் தினம் தினம் நாள்ப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் சந்திப்பார்கள்.
சிலருக்கு மன அழுத்தம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உணவில் சரியாக கவனம் செலுத்தாத போதும் இந்த பிரச்சினை தீவிரமாகும்.
இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் விதைகள் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலை அதிகமாகாமல் கட்டுக்குள் வைக்கலாம்.
அந்த வகையில் மலச்சிக்கலை கட்டுக்குள் வைக்கும் விதைகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மலச்சிக்கலை கட்டுக்குள் வைக்கும் விதைகள்
1. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துவில்லைகள் குடிப்பதற்கு முன்னர் உணவுகளில் மலச்சிக்கலை எப்படி கட்டுக்குள் வைக்கலாம் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கும். அத்துடன் ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் உள்ளது.
2. சியா விதைகள் எடை இழப்பு மற்றும் செரிமான அமைப்பை சீராக பாதுகாக்கும் வேலையை செய்கிறது. ஏனெனின் சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது தண்ணீருடன் கலந்து ஜெல் போன்ற பொருளை உண்டாக்கும். இந்த ஜெல் வயிற்றுக்குள் சென்று மலத்தை மிருதுவாக வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்களுக்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும்.
3. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சூரியகாந்தி விதைகளை உட்க் கொள்வது நல்லது. ஏனெனின் இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மலத்தை லேசாக வெளியேற்றும்.
4. மற்ற விதைகளை விட பூசணி விதைகளில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த சத்துக்கள் மலச்சிக்கலுக்கு நிவாரணம் கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |