நெஞ்சு சளிக்கு முடிவு கட்டணுமா? அப்போ சுக்கு பால் இப்படி செய்து குடித்தாலே போதும்
பொவுவாகவே காலநிலை மாற்றங்களால் பெரும்பாலானோர் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளியால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நெஞ்சு சளியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரிசெய்து விடலாம்.
அந்த வகையில் நெஞ்சு சளிக்கு வெறும் இரண்டே நாளில் தீர்வு கொடுக்கும் எளிமையாக செய்யக்கூடிய வீட்டு வைத்த்தியமான சுக்கு பால் எவ்வாறு தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 மேசைக்கரண்டி
உடைச்ச கருப்பு உளுத்தம் பருப்பு
1 1/2 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
சுக்கு - 1 இன்ச் அளவு
பொடித்த வெல்லம்/கருப்பட்டி/பனங்கற்கண்டு - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகையளவு
தேங்காய் பால் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசி, கருப்பு உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒரு பாத்திரதடதில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
பின்னர் சுக்கையும் தோல் நீக்கி, தட்டி, நீரில் போட்டு ஊறவிட வேண்டும். அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில், ஊற வைத்த சுக்குவை நீருடன் அப்படியே ஊற்றி, அத்துடன் ஊற வைத்த அரிசி, பருப்பு மற்றும் வெந்தயத்தை ஆகியவற்றையும் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்ததை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கரண்டியால் அதனை நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வடிகட்டி வைத்துள்ள பாலை சேர்த்து அத்துடன் 1 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி 15 நிமிடங்கள் வரையில் விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
கெட்டியாகத் ஆரம்பிக்கும் போது அதனுடன் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, சிறிது சுடுநீரையும் ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி கடைசியாக தேங்காய் பாலை ஊற்றி கிளறி பரிமாறினால், ஆரோக்கியம் நிறைந்த சுக்கு பால் தயார்.
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |