சளி தொல்லைக்கு தீர்வளிக்கும் டீ
குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தொண்டை மற்றும் நுரையீரலில் சளி படிவதால் கடுமையான இருமல் மற்றும் தொண்டையில் வலியை ஏற்படுத்துகிறது. சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும்.
இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டு வைத்தியம் மூலமே சரிசெய்து விடலாம்.
அந்த வகையில் எந்த டீ நாள்பட்ட சளி தொல்லைக்கு தீர்வு கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி டீ
துளசி இந்து மதத்தினர் வழிப்படக்கூடிய ஒரு புனிதமான செடியாக கருத்தப்படுகின்றது. அதில் அளப்பரிய மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
துளசியில் ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால் சளி இருமலை ஏற்படுத்தும் கிருமிகளக்கு எதிராக செயற்பட்டு அவற்றை அழிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படும் சமயங்களில் துளசி டீயை அடிக்கடி தயாரித்து அதனுமன் தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்.
புதினா டீ
சளி இருமலில் இருந்து சிறந்த தீர்வை பெற புதினா டீ பெரிதும் துணைப்புரிகின்றது.
அதில் காணப்படும் மெந்தோல் சளி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாசம் அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
கொதிக்கும் நீரில் புதினா இலைகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து அடிக்கடி குடித்தால் நாட்பட்ட சளிகூட இருந்த இடம் தெரியதாமல் போய்விடும்.
பட்டை, கிராம்பு, எலுமிச்சை டீ
பட்டை, கிராம்பு, எலுமிச்சை ஆகியன சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வரபிரசாதம் எனலாம்.
இவற்றில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் செறிந்து காணப்படுவதால், இருமல், சளிக்கு காரணமாக இருக்கும் கிருமிகளை அடியோடு அழித்து முழுமையான நிவாரணம் கொடுக்கும்.
அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |