தங்கத்தை இந்த திசையில் வைத்து பாருங்க... பணத்துக்கு பஞ்சமே இருக்காது
தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து முக்கிய நாகரீகங்களும் சக்தி, அழகு, தூய்மை மற்றும் சாதனை ஆகியவற்றின் அடையாளமாக தங்கத்தை பார்க்கின்றன.
தண்ணீரை காதலிக்காத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் இவ்வுலகில் இல்லை என கூறினால் மிகையாகாது. இதற்கு காரணம் தங்கம் விலை உயர்ந்த உலோகம் மற்றும் முதலீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றமையே ஆகும்.
பணத்திற்கு அடுத்தப்படியாக அனைவரும் தங்கத்தை சேர்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் வீட்டில் வைக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் சிறந்த திசை மற்றும் இருப்பிடம் இருப்பதாக வாஸ்து சாஸ்திரத்திரம் குறிப்பிடுகின்றது.
தங்கத்தை வீட்டில் எந்த திசையில் வைத்தால் பணம் மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் தொடர்பான வாஸ்த சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தங்கத்தை வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைப்பது அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுப்பதுடன் தங்கம் மற்றும் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
தங்கத்தை இந்த திரையில் வைப்பதால் வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஆனால் ஒருபோதும் தங்கத்தை வீட்டின் வடமேற்கு திசையில் வைக்க கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தங்கம் வைத்திருக்கும் அறையின் சுவர் மஞ்சள் நிறத்தில் இருப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மஞ்சள் நிறம் குபேரனின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொடுக்கும்.
குபேரனின் முழுமையாக ஆசி இருந்தால் வாழ்கை முழுவதும் செல்வத்துக்கு பஞ்சமே இருக்காது. தங்க நகைகள் இருக்கும் லாக்கர் எப்போது வடக்கு நோக்கி தான் இருக்க வேண்டும்.
வாஸ்து படி, வீட்டில் செல்வம், பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உங்கள் லாக்கரின் முன் ஒரு கண்ணாடியை வைப்பது பலன்களை அதிகரிப்பதாக நம்பப்படுகின்றது. மேலும் துறவிக்கு தங்கத்தை தானமாக கொடுப்பதும் அதிக தங்கத்தை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்கள் தங்கம் வாங்க உகந்த நாட்களாக கருதப்படுகின்றது.
இதனுடன், தீபாவளி, அட்சய திருதி, போன்ற சில சிறப்பு நாட்களும் உள்ளன, இந்த நாட்களிலும் தங்க நகைகள் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. தங்கம் தொடர்பான இந்த விடயங்களை கடைப்பிடிப்பது செல்வ செழிப்பை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |