எத்தனை வயதானாலும் இளமையாக இருக்க - கொரிய பெண்களின் இந்த கிறீம் போடுங்க
முகப்பொலிவு மற்றும் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க பிற்ரூட்டுடன் இந்த ஆயிலை சேர்த்து க்ரிம் செய்தால் போதும். முகப்பொலிவு கிடைக்கும்.
கொலஜன் அதிகரிக்கும் க்றீம்
முகப்பொலிவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பொதுவாக பெண்கள் வெள்ளையாகும் பல இரசாயன கிறீம்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
நாம் எமது சருமத்தை எந்த இரசாயனமும் பயன்படுத்தாதமல் வைத்திருந்தாலே அது அழகு பெறும். இப்போது நீங்கள் வெள்ளையாக்க கிறீம்களை பயன்படுத்தும் போது அது உங்கள் முகத்தில் இருக்கும் கொலாஜனை (Collagen) அப்படியே உறுஞ்சி எடுத்து விடும்.
இதனால் முகத்தில் தோல் சுருங்கும் மலர்ச்சி இல்லாமல் பொலிவு இல்லாமல் முகத்தின் தோற்றம் மிகவும் மோசமாக மாறும். இதற்காக கொரியர்களின் ஒரு கொலஜன் கிறீம் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எப்படி செய்வது
முதலில் ஒரு மீடியம் அளவான பீட்ரூட்டை எடுத்து அதை தோல் நீக்கி துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அதை ஒரு நெட் போன்ற வடிகட்டி துண்டால் துருவிக்கொள்ள வேண்டும்.
இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. அது சுத்தமான பீட்ரூட் சாறாக இருப்பது அவசியம். இந்த சாற்றை வேறொரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்துககொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 70 மி.லீ ரோஸ் வாட்டர் கலக்க வேண்டும். பின்னர் அதில் 2 ஸ்பூன் சோள மாவு கலக்க வேண்டும். அதை கொஞ்சம் அடுப்பில் வைத்து சூடாக கவேண்டும்.
அது கெட்டியாக வருவதை நீங்கள் பார்க்கலாம். இதன் பின்னர் அதை உடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் ஆளி விதைகள் கொஞ்சம் எடுத்து அதை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு அது ஜெல் பருவத்திற்கு வந்ததும் அடுப்பை விட்டு இறக்கி அந்த ஜெல்லை வடிகட்டி பீற்ரூட் சாறு கலவையில் ஊற்ற வேண்டும்.
அதனுடன் பாதாம் ஒயில் கொஞ்சம் ஊற்ற வேண்டும். இதனுடன் நீங்கள் எதாவது சீரம் கலந்து கொள்ளலாம். அவ்வளவு தான் இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
எப்படி பயன்படுத்துவது?
இதை பீட்ரூற் பேஸ் மாஸ் போட்டு முகத்தை நன்றாக கழுவி சுத்தபடுத்திய பின்னர் பயன்படுத்தலாம்.
நீங்கள் மேக்அப் போடும் பெண்ணாக இருந்தால் அதற்கு இந்த கொலாஜன் (Collagen) கிறீமை போட முன்னர் மாஸ்க் போடுதல் அவசியம்.
இந்த கிறீமை இரவு தூங்கும் முன்னர் முகத்தில் கொஞ்சமாக தடவி அதை அப்படியே இரவு முழுக்க விட்டு காலையில் கழுவ வேண்டும்.
இப்படி ஒவ்வொரு இரவும் தூங்க முன்னர் போட்டால் முகப்பொலிவு பெறுவதுடன் எத்தனை வயதானாலும் இளமையாக இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |