தினமும் 4 சுண்டைக்காய் கட்டாயம் சாப்பிடனும்... பெண்களே அதிசயத்தை காணலாம்
பெண்கள் காய்ந்த சுண்டைக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு அதிகமான நன்மையை அளிக்கின்றது. கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்துகளைக் கொண்ட இதனை வாரத்தில் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
வயிற்று பிரச்சனை நீங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது. மேலும் இதில் பினைல்கள், குளோரோஜெனின்கள் இரைப்பையில் உண்டாகும் அழற்சியை குணமாக்குகின்றது.
கணையத்தில் வரும் புண்களை குணப்படுத்த சுண்டக்காயை உண்ணலாம். பெண்கள் சுண்டைக்காயை உண்ணும்போது அதிகமான நன்மையினை பெறுவார்கள்.
பெண்களுக்கு நன்மை
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய சுண்டக்காயை உண்ணலாம். மருந்து மாத்திரைகளை விட சுண்டைக்காய் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் உலர வைத்துக் கொள்ளவும். மாதவிடாய் நேரங்களில் சுண்டைக்காயை தூளாக்கி மோரில் ஊற வைத்து குடிக்கவும்.
தினமும் 4 சுண்டைக்காய்களை வெறுமனே வாயில் மென்று தின்றால் ஹார்மோன் பிரச்சனை நீங்கி மாதவிடாய்கோளாறுகள் குணமாகிவிடும்.
பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சனையாக உள்ள நீர்க்கட்டி, தைராய்டு ஆகிய பிரச்சனைக்கு தீர்வாகும்
பெண்களில் பலர் ரத்த சோகையால் அவதிபடுகின்றனர். அதை குணமாக்க சுண்டைக்காயை அவ்வப்போது சாப்பிடலாம். இவை ரத்தத்தில் ஹீமோகுளோபினை பெருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |