மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வாகும் ஸ்ட்ராபெரி பழம்!
பொதுவாக சிலருக்கு ஜீரண பிரச்சினைகள் மற்றும் தொடர் வயிற்று வலி பிரச்சினை இருக்கும் இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிடுவது சிறந்தது.
ஏனெனில் ஸ்ட்ரோபெரி பழத்தில் அதிகமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A காணப்படுகிறது. இது வயிற்று பிச்சினைகள் தலைமுடி பிரச்சினைகள் நீக்க உதவுகிறது.
அந்த வகையில் ஸ்ட்ராபெரி பழத்தில் மகத்துவங்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
குடல் பிரச்சினை
ஸ்ட்ராபெரி பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிடுவதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
பொதுவாக ஸ்டராபெரியில் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் உண்டு. இது வயிற்றில் இருக்கும் குடல்களில் ஏற்படும் நோய்களை கட்டுபடுத்தும்.
நாம் அன்றாடம் உண்ணும் பழங்களில் பொதுவாக வைட்டமின்கள், கல்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படும். அதிலும் ஸ்ட்ராபெரி பழங்களில் வைட்டமின் ஏ சத்து காணப்படுகிறது. இது தலைமுடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சினைகளை கட்டுபடுத்தும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவோமானால் முகம் பொலிவு பெறும் மற்றும் முகத்தில் இருக்கும் வடுக்களை மறைத்து சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஸ்ட்ரோபரி பழத்தில் அதிகமான ஆர்ஜின் அதிகமாக இருக்கும் இது உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்க செய்கிறது.