நீரிழிவு நோயாளிகள் பிங்க் நிற மிளகினை சாப்பிடலாமா? இனி முழுசா தெரிஞ்சுக்கங்க!
மிளகு வகைகளில் கருப்பு மிளகு, வெள்ளை மிளகு போன்று மிளகு பழங்களை வினிகரில் ஊறவைத்து சிவப்பு மிளகு கிடைக்கிறது.
ஆனால் நாம் இன்று பார்க்கும் சிவப்பு மிளகு என்பது பிரேசிலியன் பெப்பர்ட்ரீயிலிருந்து பெறப்படுகிறது.
இது மெல்லிய கூரான இலைகளைக் கொண்ட ஒரு புதர் மரமாகும்.
இந்த மிளகு மரம் 4 முதல் 10 மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் தண்டு சுமார் 25 முதல் 35 செ. மீ அகலம் கொண்டது. இந்த மிளகு பெர்ரிகளை சிரப்கள், வினிகர் மற்றும் சிற்றுண்டிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே அறிவோம்.
பிங்க் மிளகு மலமிளக்கியாக செயல்படுகிறது
இந்த பிங்க் மிளகில் டையூரிடிக் பண்புகள் காணப்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதை சாலட் மீது தெளித்து எடுத்துகொள்ளலாம்.
இதை தூவுவதற்கு முன்பு இலேசாக நசுக்கி சேர்க்க வேண்டும்.
மாதவிடாய் முன் அறிகுறிகளை போக்க உதவுகிறது
இந்த மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை உட்கொண்டு வந்தால் சிறுநீர் தொற்று மற்றும் மாதவிடாய் முன் அறிகுறிகளை போக்க முடியும்.
பிங்க் மிளகின் நறுமணப் பண்புகள் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும் அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் செய்கிறது.
ஜலதோஷத்திற்கு சிகிச்சை அளிக்கிறது
இந்த மூலிகைகளில் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் சலதோஷத்திற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மார்புப் பகுதியில் இருக்கும் சளியை வெளியேற்ற உதவுகிறது.
புற்றுநோயை தடுக்கிறது
பிங்க் மிளகில் உள்ள அந்தோசயின்கள் மார்பக புற்று நோய், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மார்பக புற்று நோயில் ஏற்படும் மெட்டாஸ்டாசிஸை தடுக்கிறது.
புரோஸ்டேட் கட்டிகள் உருவாகுவதை தடுக்கிறது.
பிங்க் மிளகில் காணப்படும் அந்தோசயின்கள் தான் மிளகிற்கு பிங்க் நிறத்தை கொடுக்கிறது. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்களாக செயல்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
இந்த மரத்தில் இருந்து பெறப்படும் உலர்ந்த இலைகளை போட்டு தேநீர் குடித்து வரலாம்.
இந்த இலைகளில் இருந்து பெறப்படும் சாறு உள் மற்றும் வெளிப்புற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மேற்பூச்சாக பயன்படுகிறது.
இந்த மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் காபி தண்ணீர் கீல்வாதத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
இந்த சிவப்பு மிளகை அப்படியே பயன்படுத்தாமல் இலேசாக வறுத்து நசுக்கி பயன்படுத்தலாம். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய்களை எதிர்த்து போராட உதவுவதால் நீரிழிவு நோயாளிகளும் பயன்படுத்தலாம்.
முலிகையாக இருந்தாலும் சரியான முறையில் பயன்படுத்தினல் மட்டுமே அதன் நன்மைகளை பெற முடியும் இதன் பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து தெரியாமல் அளவு தெரியாமல் ஊட்டச்சத்து நிபுணரை ஆலோசிக்காமல் பயன்படுத்த வேண்டாம்.
அது பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம்.