மணமணக்கும் நெய்யின் நன்மைகள்
சமையலில் வரும் மணத்தை அதிகரிக்க பெரும்பாலானோர் நெய்யை பயன்படுத்துவர்.
நெய்யானது மணம், சுவை என்பவற்றோடு மட்டுமல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.
தினமும் சிறிதளவு நெய் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான விட்டமின்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இதில் விட்டமின் டி, ஏ,ஈ போன்றவை உள்ளன.
வயதானவர்கள் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூட்டு, தசை போன்றவற்றில் தேய்மானம் எதுவும் வராமல் நன்றாக செயல்படுவதற்கு உதவி புரியும்.
நெய் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது. ஒரு மேசைக்கரண்டி நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் நெஞ்செரிச்சலிலிருந்து விடுபடலாம்.
நெய்யில் கொழுப்பை கரைக்கும் விட்டமின்கள் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.