ஆண்மை வீரியத்தை அதிகரிக்கும் ரோஜா குல்கந்து.. வீட்டிலேயே செய்வது எப்படி?
ரோஜா குல்கந்து ஆனது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு டீஸ்பூன் குல்கந்து சாப்பிடுவது உங்கள் முகத்தை எப்போதும் மேம்படுத்தும்.
இது தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். உங்கள் வீட்டிலும் குல்கந்தை தயார் செய்யலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட குல்கந்து ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். அதை வீட்டில் தயாரிப்பதற்கான வழியும் மிகவும் எளிதானது. குல்கந்து நன்மைகள் மற்றும் அதை நீங்கள் எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம்....
தேவையான பொருட்கள்
ரோஜா பூ - 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)
பெரிய கற்கண்டு - 100 கிராம்
தேன் - 100 கிராம்
குங்குமப்பூ - 5 கிராம்
வெள்ளரி விதை-10 கிராம்
கசகசா -10 கிராம்
செய்முறை
முதலில், ரோஜாபூ பூச்சிகொல்லி அடிக்காத மலராக இருக்க வேண்டும். அந்த பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும்.
நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது.
இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.
பின் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும்.
இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார். இதை பீங்கான் பாட்டிலில் எடுத்துவையுங்கள்.