வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பொதுவாக பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அதிலும் வறுத்து சாப்பிட்டால் சில சிறப்பு நன்மைகள் இருக்கின்றது.
இது உடலில் நடக்கும் அதிசயம் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆறு பூண்டு பற்களை சாப்பிட்ட பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இரைப்பையில் உள்ள உணவு நன்கு செரிமானம் அடைய இது உதவுகின்றது. இது ஒரு சிறந்த உணவாகவும் பயன்படுகின்றது.
உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தை வெளியேற்றுகின்றது. மேலும், உடலில் கெடுதல் தரக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியாவானது இரத்த நாளங்களுக்குள் சென்று அவற்றை வெளியேற்றுகிறது.
இதனையடுத்து, பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது. வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்களை முழுவதுமாக அழிக்க பயன்படுகின்றது.
கொலஸ்டராலின் அளவை சீராக வைத்துக் கொள்கிறது. உடலில் உள்ள தமணிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கின்றது. எலும்புகளை பலமாக வைத்துக் கொள்கின்றது.
பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாகவும் இருக்கின்றது. பூண்டின் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகின்றது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கின்றது.
உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.