தினமும் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஏலக்காய் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருள் மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும், குறைந்த அளவிலான கலோரிகளையும் அவசியமான தாதுக்களையும் வழங்குகிறது.
அந்தவகையில், இரவு தூங்கும் முன் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

செரிமானம் மேம்படும்
ஏலக்காய் செரிமான நொதிகளின் செயல்பாட்டைத் தூண்டி, உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது. இதனால் வாய்வு, வயிற்று உப்புசம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் குறையக்கூடும்.
வாய் துர்நாற்றம்
குறையும் ஏலக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் வாய் புத்துணர்ச்சியாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.
நிம்மதியான தூக்கம்
ஏலக்காயில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவும். இதனால் மன அழுத்தம் குறைந்து, நிம்மதியான தூக்கம் கிடைக்க உதவும்.