ஒவ்வொரு காலையும் பூண்டு தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் என்ன தெரியுமா?
ஒவ்வொரு காலை நேரமும் பூண்டு ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

பூண்டு
ஆயுர்வேதத்தில் பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இதை காலை வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் சக்திவாய்ந்த நன்மைகள் தரும் என்று கூறப்படுகின்றது.
பூண்டில் உள்ள அல்லிசின் என்ற சேர்மம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. ஆனால் இவவ்ளவு நன்மைகள் கொண்ட பூண்டை எல்லோரும் சாப்பிடுவதில்லை.
அந்த வகையில் காலையில் பூண்டு தண்ணீர் குடித்தால் என் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

நன்மைகள்
இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். பூண்டை நீரில் ஊறவைத்து குடிக்கும் போது அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுவதன் மூலம், இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சிலருக்கு அடிக்கடி உடல்நலத்தில் அசௌகரியம் இருந்தால் அவர்களுக்கு பூண்டு தண்ணீர் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
இது நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் வெள்ளை இரத்த அணுக்களை வலுப்படுத்தி, சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு தண்ணீர் குடிப்பதால் அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும், உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
பூண்டு நீர் ஒரு இயற்கையான நச்சு நீக்கும் பானம் எனப்படுகின்றது. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்த உதவும்.
அதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தைச் சுத்திகரித்து, முகப்பருவைக் குறைத்து, உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் கொடுக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |