உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கணுமா? காலையில் இந்த கருப்பு பானத்தை குடிங்க
நமது மனமும் உடலும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க காலையில் இந்த கருப்பு பானம் குடிப்பதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
கருப்பு காபி நன்மைகள்
காலையில் எழுந்தவுடன் அந்த நாளை தேனீர் அல்லது காபியுடன் ஆரம்பிப்பதே வழக்கமாக வைத்துள்ளனர் நம்மில் சிலர். தேநீர் மற்றும் காபி உலகம் முழுவதும் பிரபலமானது.
இது அதன் சுவைக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுகின்றது. நமது மனதை அமைதியாக்கி ஒரு நல்ல உணர்வை கொண்டு வரும் பானங்களில் காபியும் ஒன்று.
இதில் கருப்பு காபி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கருப்பு காபி பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்பட்டு உட்கொள்ளப்படுகிறது.
உடற்பயிற்சி பிரியர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் கருப்பு காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை சாதரணமாக நாமும் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் இது பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
எடை இழப்பு: வேகமாக எடை குறைக்க விரும்பினால், கருப்பு காபி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பு அமிலங்கள் வெளியேறுவதை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள காஃபின் எடை குறைக்க உதவுகிறது.
மனதை ஒருநிலைப்படுத்தும்: கருப்பு காபி நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இதனால் நோர்பைன்ப்ரைன் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியாகும்.
இதனால் உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இது உங்களுக்கு மனநிலை ஒரே நிலையில் செயற்பட உதவும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்சிதை மாற்றம்: கருப்பு காபியில் காஃபின் உள்ளது, இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் ஒரு இயற்கை தூண்டுதலாகும். வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும். இது தவிர உங்கள் உடல் கலோரிகளை மிகவும் திறமையாக எரிக்க உதவும். இதன் காரணமாக உடல் அழகான வடிவத்தை பெறும்.
கல்லீரல் ஆரோக்கியம்: தினமும் காலையில் கருப்பு காபி குடிப்பது உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது கல்லீரல் தொடர்பான நோய்களான கல்லீரல் சிரோசிஸ் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே ஆரோக்கியத்தை விரும்பினால் தினமும் காலையில் கருப்பு காபி குடிப்பதை வழக்கப்படுத்துங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |