தினமும் இளநீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
ஆரோக்கிய பானமாக அனைவருக்கும் பிடித்த இளநீர் யாரெல்லாம் குடிக்கலாம். யார் எந்த நேரத்தில் குடிக்கக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இளநீர்
பொதுவாக வெயில் காலங்கள் என்று வந்துவிட்டாலே தண்ணீர் சத்து அதிகமாக காய்கறிகள், பழங்கள், பானங்கள் என உண்பதற்கு தான் பெரும்பாலான நபர்கள் விரும்புவார்கள்.
அதிலும் இளநீர் வெயில் காலங்கள் மட்டுமின்றி அனைத்து பருவகாலங்களிலும் மக்கள் அருந்துகின்றனர். ஏனெனில் இதில் உள்ள மினரல்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றலை கொடுக்கின்றது.
வெப்ப காலங்களில் உடம்பில் வெப்பத்தை தனிக்கக்கூடிய பானமான இளநீர், உடம்பிற்கு தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இளநீர் தினமும் அருந்துவாால் ஆபத்து ஏற்படும் என்பதில் உண்மையில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒருவர் தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்தினால் உடல் எடைகுறைவதுடன், இன்சுலினை சரியான முறையில் தூண்டவும் செய்கின்றது.
இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோய்களுக்கு பிரச்சினை என்று கிளப்பப்படும் வதந்தி உண்மையில்லையாம்.
ஏனெனில் எவ்வளவு பெரிய இளநீர் என்றாலும் அதில் அதிகபட்ச சர்க்கரையின் அளவு 250மில்லி தான் இருக்குமாம். இவை மற்ற குளிர்பானங்களை விட குறைவான சர்க்கரையையும், குறைவான கார்போஹைட்ரேட்டையும் தருகின்றது.
இளநீர் எவ்வாறு அருந்தலாம்?
இளநீரில் உள்ள சத்துக்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் தண்ணீரை மட்டும் பருகாமல் அதில் இருக்கும் வழுக்கையான தேங்காவையும் சாப்பிட வேண்டுமாம்.
தண்ணீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் அந்த தேங்காயில் தான் அதிகமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், தேவையான கொழுப்பு சத்தும் கிடைக்கின்றது.
வெளிநாட்டில் வசிக்கும் மக்கள், உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் இவ்வாறே இளநீரை சாப்பிடுகின்றனர். மேலும் இதில் இருக்கும் கொழுப்பு சத்து முகத்தினை பளபளப்பாக வைத்திருக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா?
பச்சை இளநீரை விட நீரிழிவு நோயாளிகள் செவ்விளநீர் அருந்துவது மிகவும் நல்லது. ஆனால் பச்சை இளநீரை நீங்கள் பருகினால் அதில் இருக்கும் தேங்காயையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இவ்வாறு நீங்கள் சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படும்.
இன்று பலரையும் வாட்டி வதைக்கும் இதயப் பிரச்சினை, ரத்தக்கொதிப்பு இவைகள் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படுவதால், தினமும் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும இவை சிறந்த மருந்து கூறிவிட முடியாது. ஆம் சிறுநீரக பிரச்சினை, சிறுநீரகத்தில் கல் வராமல் இருப்பதற்கு இளநீர் பருகுவது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இளநீரை தாராளமாக அருந்தலாம். ஆனால் ஏதேனும் உடல்ரீதியான தொந்தரவு ஏற்பட்டு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் அறிவுரைபடி எடுத்துக்கொள்ளலாம்.
யாரெல்லாம் இளநீரை தவிர்க்க வேண்டும்?
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இளநீரை அருந்தக்கூடாது.
தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளவர்கள் எடுக்க வேண்டாம்.
காலில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படுபவர்கள், நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள்...
இதய பிரச்சினை உள்ளவர்கள்... பொட்டாசியம் சோடியம் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இளநீரை பருக வேண்டாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு இளநீர் அருந்தலாம். அதிகமாக பருகினால் பொட்டாசியம், கார்போஹைட்ரேட் அளவும் அதிகரிப்பதால் பக்கவிளைவு ஏற்படுமாம்.
ஆரோக்கிய உடலைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு இளநீர் அருந்தலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் அளித்துள்ளனர்.