வீட்டில் சங்கு பூ கொடியை நட்டால் இவ்வளவு நன்மையா? பணம் கொட்டப்போவது உறுதி!
பொதுவாகவே இந்து சாஸ்திரதில் குறிப்பிட்ட சில தாவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்ப்படுகின்றது.அதில் சங்கு பூ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி, சாஸ்திரப்படி மிகவும் செல்வாக்கை கொண்டுவரும் தாவரமாக பார்க்கப்படுகின்றது.
இது நீதியின் கடவுளான சனி பகவானுக்கு மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதனை வீட்டில் வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும் துணைப்புரியும். இதனால் கிடைக்கூடிய சாதக விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்னென்ன நன்மைகள்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சங்கு பூ கொடியை நட்டு வைத்த இந்த மலர்களை கொண்டு இறைவனை வழிப்பட்டால் வாழ்வில் செல்வ செழிப்புடன் வாழலாம் என நம்பப்படுகின்றது.
சங்கு பூக்கள் பொதுவாக இரண்டு நிரங்களில் காணப்படுகின்றது. இவை சனி மற்றும் விஸ்ணு பகவானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகின்றது.
வெள்ளை மற்றும் நீல நிறங்களில் சங்கு பூ செடி அதிகம் காணப்படும். இவற்றில் நீல சங்கு பூ செடியை வீட்டில் வைப்பது பல நன்மைகளைத் தரும். நீல சங்கு பூ செடி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, நேர்மறையான பலன்களைத் கொடுக்கின்றது.
வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால் கிழக்கு திசையில் நடலாம். லட்சுமி, விநாயக, குபேரன் ஆகியோர் வடகிழக்கு மூலையில் வாழ்வதாகக் கூறப்படுகிறது. அங்கு சங்கு பூ செடியை நடுவது சுப பலன்களை தரும். வருமானம் பெருகும்.
அதுவும் வீட்டில் சங்குப் பூ செடியை வளர்க்க நினைத்தால், அதை வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யுங்கள். இவ்விரு தினங்களும் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிக்கு உரிய தினங்களாகும். இத்தினங்களில் வளர்க்கும் போது, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்குவதோடு, கடன் தொல்லைக்கும் முடிவு கட்டிவிடலாம்.
மேலும் இந்த பூக்கள் ஒருவரது ஜாதகத்தில் உள்ள சனி தோஷத்தை நீக்கவும் உதவி புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பண பிரச்சனைகளை அதிகம் சந்திப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த தந்திரத்தை மேற்கொள்ளும் போது சனி தோஷத்தின் தாக்கமும் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |