விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! மாத்திரையால் உயிரிழந்த சிறுவன்... வீடியோ எடுத்த நண்பர்கள்
சிறுவன் ஒருவன் விளையாட்டாக அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாத்திரையால் பலியான சிறுவன்
இன்றைய காலத்தில் குழந்தைகள் விளையாட்டாக செய்யும் செயல் பாரிய பிரச்சினையில் சென்று முடிகின்றது.
அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த ஜேக்கப் ஸ்டீவன்ஸ் என்ற 13 வயது சிறுவன், தனது நண்பர்களிடம் சவால் ஒன்றினை விடுத்துள்ளான். அதாவது டிக்-டாக்கில் 'பெனாட்ரில் சேலஞ்சை' செய்து முடிக்க முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த சவாலை முடிக்க, அவர் ஒரே நேரத்தில் 12 முதல் 14 பெனாட்ரில் மாத்திரைகளை உட்கொண்டுள்ள நிலையில், இதனை அவரது தோழர்கள் அருகில் நின்று காணொளி எடுத்துள்ளனர்.
மாத்திரைகளை சாப்பிட்ட சில நிமிடத்தில் கீழே விழுந்த சிறுவனை, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். வெண்டிலேட்டர் உதவியால் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
டிக்டாக் இவ்வாறு Benadryal சவாலை செய்த சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.