வெறும் 14 நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதை செய்தால் போதும்
உங்களின் வயிற்று தொப்பையை குறைக்க தொடர்ந்து 14 நாள்கள் நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தொப்பையால் அவதி
இன்று சிறியவர் முதல் பெரியவர் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கியமானதாக உடல் பருமன் மற்றும் தொப்பை காணப்படுகின்றது.
உடல் எடையைக் குறைப்பதற்கு அவ்வப்போது பல முயற்சிகளையும், உடற்பயிற்சியினையும் செய்துவரும் நிலையில், 14 நாட்களில் தொப்பையைக் குறைக்கும் விழிமுறையினை ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் அளித்துள்ளார்.
தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒவ்வொரு விதமான உணவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவைகளை குறித்து தெரிந்து கொள்வோம்
தொப்பையை குறைக்க என்ன உணவு சாப்பிடலாம்?
செரிமான நொதிகளின் ஓட்டத்தை செயல்படுத்துவதால், செரிமான பிரச்சினையை வராமல் தடுக்கும் கீரையை உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.
தொப்பையை விரைவில் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், இனிப்பு பண்டங்களை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக இனிப்புள்ள பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
வயிற்றுக்கான உடற்பயிற்சியை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். அதாவது வயிற்றை இழுத்து மூச்சை வெறியேற்றும் பயிற்சி தினமும் 10 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுத்து வெளியேற்றும் போது 10 வினாடிகள் கழித்து படிப்படியாக பிடியை விடுவிக்க வேண்டுமாம்.
எடை இழப்பு மற்றும் உடல் பருமனை குறைக்கும் சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டாயம் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதிக கொழுப்புகளை தவிர்க்கவும்... குறிப்பாக வெண்ணெய் பழங்கள், நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை நிச்சயம் குறையும்.
வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், பசியை குறைக்கவும் உதவும் புரதச்சத்து நிறைந்து உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் இவை செரிமானம் அதிகளவில் ஏற்படாதாம்.
உடல் எடையைக் குறைக்க தண்ணீர் பெரிதும் உதவி செய்கின்றது. அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்வதால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு சீராக இருக்கின்றது.
தினமும் குறைந்தது 75 நிமிடமாவது நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கையுடன் நீங்கள் வாக்கிங் செல்லும் போது உங்களது மனமும் அமைதிநிலைக்கு செல்லும்.