ரத்த ஓட்டம் அதிகரிக்க சூப்பரான பீட்ரூட் டிப்: செய்வது எப்படி?
பீட்ரூட்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இரும்புச் சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
மேலும், ரத்தணுக்களின் உற்பத்தியை வளமாக்கும் சக்தி பீட்ரூட்டில் உள்ளது.
பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால் நம் உடலிலிருந்து ரத்த நாளங்கள் நன்றாக விரிவடையும்.
ரத்த ஓட்டத்தையையும் அதிகரிக்கும். இவ்வளவு சத்து கொண்ட பீட்ரூட்டை வைத்து பீட்ரூட் டிப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2 கப் (துருவியது)
காய்ந்த புதினா இலைகள் - 2½ டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2½ டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தயிர் - 4 கப்
பூண்டு - 4 பல்
செய்முறை
முதலில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில், நறுக்கிய பூண்டு, சிறிது காய்ந்த புதினா, துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 5 நிமிடம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
இதன் பின்னர், ஒரு மணி நேரம் கழித்து அந்த பீட்ரூட் கலவையில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய், காய்ந்த புதினா இலை தூவி பரிமாறினால் சூப்பரான பீட்ரூட் டிப் தயாராகிவிடும்.
வாரத்திற்கு 3 முறை இந்த பீட்ரூட் டிப் சாப்பிட்டு வந்தால் ரத்தம் ஓட்டம் சீராக இயங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |