எவ்வளவு வயதானாலும் நதியாவை போல இளமையாக இருக்க வேண்டுமா?
அழகு என்பது நம் எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அதை பராமரிக்காமல் சிலர் கவனயீத்தில் விடுகின்றனர். இதனால் உங்கள் அழகு மறைந்து அதற்கு மேல் பொலிவற்ற தோற்றம் காணப்படுகின்றது.
பராமரிப்பு என்றால் அதில் மேக்கப் போடுதல் உள்ளடங்காமல் வரும். பல வகையான மேக்கப் பொருட்களில் பல இரசாயனங்கள் கலந்து காணப்படுகின்றன.
ஆனால் எவ்வளவு வயதாலும் இளமையான தோற்றம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நமது முன்னோர்களின் ஆயுள்வேத அழகுக் குறிப்புக்களை பின்பற்றுதல் அவசியமாகும். இந்த பதிவில் தொடர்ந்து ஆயுர்வேத அழகுக் குறிப்புக்களை பார்க்கலாம்.
ஆயுர்வேத அழகுக்குறிப்புகள்
நாம் இளமையாக இருக்கும் போது இருந்த அழகு வயது கூடிச்செல்லும் போது கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதற்கு சில ஆயுர்வேத குறிப்புகள் சிறந்த பலனாக அமையும்.
ஆயில் மசாஜ் நமது முன்னோர்கள் மற்றும் தற்போதய ஆயுர்வேதத்திலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள பித்த தோஷத்தை சரியான அளவில் பராமரிக்க முடியும்.
இதனால் சருமம் அவ்வளவு எளிதில் இளமையாக மாறாது. எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள் பாலை பயன்படுத்தலாம். நமது சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்க பால் உதவுகிறது.
யோகா செய்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதனால் எத்தனை வயதாலும் உடலை வில் போல வளைக்கும் அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதுடன் நீங்கள் இளமையாகவும், அழகாகவும் இருப்பீர்கள்.
தேன் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தை இளமையாகவும் வைத்திருக்கும். தேனை 15 நிமிடங்கள் உடலில் தேய்த்து பின்னர் கழுவினால் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
உடலுக்கு போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ண வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பு இலையை அரைத்து முகத்திற்கு பூசி வர வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் செய்து வந்தால் நீங்கள் வயதாலும் மிகவும் சுறுசுறுபாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |