கேரளா பெண்கள் மாதிரி பொலிவா இருக்கனுமா? இத மட்டும் Try பண்ணுங்க போதும்
பொதுவாகவே பெண்களுக்கு தனது சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது என்றால் ஆர்வம் தான். அதற்காக உளிய முறையில் வீட்டில் இருந்து பல முயற்சிகளை எடுப்பார்கள்.
அதை தவிர்த்து இந்த எளிய விடயங்களைப் பின்பற்றினால், உங்கள் சருமத்தை நீங்கள் இயற்கையான முறையில் மாற்றிக்கொள்ள முடியும்.
அவை என்னவென்று தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
-
எப்பொழுதும் லிப்-பாம் எடுத்துக் கொள்ளுங்கள்
- தோல் பராமரிப்பு பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தவும்
-
மேக்கப்பை தவறாமல் அகற்றவும்
- உங்கள் தோலை இருமுறை சுத்தப்படுத்துங்கள்
- உங்களால் முடிந்தவரை உங்கள் கைகளை பாதுகாக்கவும்
- ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள்
- உதடுகள் வறண்டு போவதை உணரும் போது லிப்-பாம் பயன்படுத்த முடியும்
மேலும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி சருமத்தை பொலிவாக்கலாம் என பார்க்கலாம்.
01. தேவையான பொருட்கள்
-
பாசிப்பருப்பு மாவு இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள் அரை டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
- சிறிது தண்ணீர்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு மாவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும். உலர்ந்த பிறகு முகத்தை கழுவி விடவும்.
02. தேவையான பொருட்கள்
-
கற்றாழை ஜெல்
-
எலுமிச்சை சாறு
செய்முறை
கற்றாழை மற்றும் எலுமிச்சை கலவை உருவாக்க, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
03. தேவையான பொருட்கள்
-
சீரகம் ஒரு தேக்கரண்டி
- இரண்டு கப் தண்ணீர்
செய்முறை
ஒரு தேக்கரண்டி சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் ஒரு கப்பாக வற்றியதும் இறக்கி ஆற விடவும்.
ஆறியதும், அந்த நீரில் முகத்தை கழுவி மென்மையான துணியால் துடைக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |