உலகின் மிகவும் அழகான பாம்புகள்: எந்த அளவிற்கு ஆபத்தானவை தெரியுமா?
பாம்புகள் ஒரு ஊர்வனவாகும். இந்த பாம்புகளை பார்த்தால் சிலர் பயப்படவார்கள். சூற்றுச்சூழலின் நன்மைகளுக்காக பாம்புகள் பெரிதும் உதவுகின்றன.
உலகின் ஆதாரதாக கருதப்படும் விவசாயத்திற்கு தீங்க விளைவிக்கம் எலிகளை பிடித்து உண்டு மனிதனின் நன்மைக்கு பல வழிகளில் உதவி செய்கின்றன.
உலகில் ஏராளமான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. இதில் சில விஷப்பாம்புகளாகவும் சில விஷமற்றவைகளாகவும் காணப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் மழைக்காடுகளிலிருந்து அரிசோனாவின் பாலைவனங்கள் வரை மிகவும் அழகான பாம்புகள் காணப்படுகின்றன. இந்த பதிவில் உலகின் மிகவும் அழகான பாம்புகள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகில் உள்ள அழகான பாம்புகள்
நீல பவளப்பாம்பு (காலியோபிஸ் பிவிர்கேடஸ்) இந்த பாம்புகள் நடுத்தர அளவிலான பாம்பு கருப்பு அல்லது அடர் நீல நிற உடல்,
பக்கவாட்டில் வெள்ளை அல்லது வெளிர் நீல நிற கோடுகள் மற்றும் பிரகாசமான சிவப்பு தலை மற்றும் வால் ஆகிய வடிவத்தை கொண்டிருக்கிறது.
இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆனால் மனிதர்களை அதிகதாக தாக்காது. இத உலகில் குறைந்தளவில் காணப்படுகின்றது.
சான் பிரான்சிஸ்கோ (தம்னோபிஸ் சர்டலிஸ் டெட்ராடேனியா) இந்த பாம்பின் அமைப்பு பிரகாசமான நீலம் அல்லது பச்சை-நீல நிற வயிறு, சிவப்பு மற்றும் கருப்பு கோடுகள் மற்றும் சிவப்பு தலை போன்றவற்றை கொண்டுள்ளது.
தற்போது வாழ்விடங்கள் இழப்பு மற்றும் விரிவான சட்டவிரோத வர்த்தகம் காரணமாக இவ்வினம் அழிந்து வருகின்றது. இது விஷமற்ற தன்மை கொண்டதால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை.
அரிசோனா பவளப்பாம்பு (மைக்ரூராய்ட்ஸ் யூரிக்சாந்தஸ்) இது சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் பட்டைகளால் மன் உடலமைப்பை கொண்டது.
அரிசோனா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றது. இதன் இந்த வண்ண உடலமைப்பு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் விஷமறற தன்மையை வெளிபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. இது மிகவும் சிறிய பாம்பு. குறுகிய விஷத்தன்மை கொண்ட பாம்பு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |