தாடி வைத்திருக்கும் நபர்களே! கொரோனாவால் மிகப்பெரிய ஆபத்து... உடனே ஷேவ் செய்திடுங்க
கொரோனா காலத்தில் அதிகமாக தாடி வளர்ப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று தோல் மருத்துவர் கூறியுள்ளனர்.
புதர் போல தாடி வளர்த்தால் நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். அவ்வாறு தாடி வைத்து நீங்கள் மாஸ்க் போடும் பட்சத்தில் மாஸ்க்கால் அனைத்து இடங்களையும் கவர் செய்ய முடியாது.
இதனால் மாஸ்க் ஒழுங்கற்ற தன்மையுடன் இருக்கும். சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதன் வழியாக வைரஸ்களால் உள்ளே செல்ல முடியும். இது உங்களால் மற்றவருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது நீங்கள் சுவாசிக்கும் போதோ, பேசும் போதோ, இருமும் போதோ உங்களிடமிருந்து வெளியேறும் வைரஸ் உங்கள் மாஸ்க்கை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
அதேபோல நீங்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தால் மாஸ்க்கை தாண்டி அந்த வைரஸ்கள் உங்களைத் தாக்கும்.
ஆகவே இந்த கொரோனா காலத்தில் உங்களது தாடியை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோல் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.