புதிய அணிகளுக்கான ஐபிஎல் ஏலத்தில் மாற்றம்! எத்தனை பேரை தேர்வு செய்யமுடியும்? கதிகலங்கிய மற்ற அணிகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிபோட்டியில் தற்போது சென்னை அணி 192 ரன்கள் நிர்ணயித்துள்ளது.
தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் கொல்கத்தா அணி விக்கெட்டுகள் சரிந்து தடுமாறி வருகிறது... இந்த நிலையில், இந்த ஆண்டுடன் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு முதல் இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ இணைக்க உள்ளது. அதனால் தற்போது ஒரு அணியில் உள்ள வீரர்கள் வேறு அணிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அடுத்த ஆண்டு ஏலத்தில் பிசிசிஐ புதிய முறையை செயல்படுத்த உள்ளதாக Cricbuzz ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக, புதிதாக இணையவுள்ள 2 அணிகள், தங்களுக்கு வேண்டிய வீரர்களை வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஏலத்தில் பங்கேற்பதற்காக விண்ணபிக்கும் வீரர்களை, ஏலத்துக்கு முன்னதாகவே அந்த அணிகள் வாங்கிக் கொள்ளலாம். இதனால், சம்பந்தப்பட்ட வீரரும், அந்த அணி நிர்வாகமும் ஆலோசனை நடத்தி ஊதிய தொகையை முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனாலும் எத்தனை வீரர்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாம் என குறிப்பிடப்படவில்லை. அதில் 3 முதல் 4 வீரர்கள் வரை வாங்கிக் கொள்ளலாம் என தெரிகிறது.
ஒவ்வொரு அணிகளும் தங்களது முக்கியமான வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வரும் சூழலில், ஏலத்துக்கு முன்பாகே புதிய அணிகள் வீரர்களை வாங்குவது மற்ற அணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.