பெண்களை கெட்டவார்த்தையில் திட்டிய அசிம்! பல உண்மைகளை உடைத்த சீரியல் நடிகர்
நடிகர் அசீம் பிக் பாஸ் வீட்டில் கடுமையாக நடந்து கொள்வதை போலவே ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இருப்பதாக சீரியல் நடிகர் அருண் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அருண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது,
நான் அசிமுடன் “`பூவே உனக்காக” தொடரில் நடித்துள்ளேன்.
அந்த சீரியலில் நடிக்கும் போது ஹீரோயினை தகாத வார்த்தைகனை பயன்படுத்தி அசிம் திட்டியுள்ளார்.
பிறகு அந்த படப்படிப்பு தளத்தில் இருந்த எல்லா பெண் ஆர்ட்டிஸ்ட்களும் அவர் மன்னிப்பு கேட்டால் தான் நடிப்போம் என்று தெரிவித்தார்கள்.
அப்போது கூட அவருக்கு ஆதரவாகவே அந்த சீரியல் தயாரிப்பாளர் பேசினார்.
உண்மை முகத்தினை உடைத்த அருண்
மிகவும் உறுதியா மன்னிப்பு கேட்காமல் நாங்க நடிக்க மாட்டோம் என்று அவர்கள் சொன்னதால் மட்டும்தான் அசிம் மன்னிப்பு கேட்டார்.
அவருடைய உண்மையான முகத்தை தான் அவர் பிக் பாஸ் வீட்ல காட்டியுள்ளார்.
அதேபோல, பிக் பாஸ் ஆயிஷாவையும் தனக்கு நன்றாக தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிஷாவினால் அவருடைய கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது என்று கூறியுள்ளார்.
இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் கண்டித்த பிறகு அசீம் உடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியான நிலையில் திடீர் என்று நடிகர் அருண் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.