பிக்பாஸ் வீட்டில் சர்ச்சை ஜோடி- அர்னவின் முன்னாள் மனைவி போட்ட மாஸ் பதிவு
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சர்ச்சை ஜோடியான அர்ணவ்-அன்ஷிதாவிற்கு எதிராக திவ்யா போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தனிமையில் வாழும் சீரியல் நடிகை
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “கேளடி கண்மணி'” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் திவ்யா ஸ்ரீதர்.
இவர் செல்லம்மா சீரியல் மூலம் பிரபலமாக இருக்கும் நடிகர் அர்ணவுடன் பல ஆண்டுகளாக லிவிங் டூ கெதரில் இருந்து வந்தார்.
பின்னர் அதிரடியாக ஒரு நாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரச்சினை வெடித்தது.
இதனை தொடர்ந்து திவ்யா - அர்ணவ் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் செல்லமா சீரியல் பிரபலம் அன்ஷிதா தான் என திவ்யா பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
திவ்யா கொடுத்த மாஸ் ரிப்ளை
இந்த நிலையில் திவ்யா அர்னவின் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மாறாக அர்னவ்- அன்ஷிதா இருவரும் பிக்பாஸ் சீசன் 8 முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளனர்.
இதனால் நடிகை திவ்யா இதற்கு என்ன பதிலடிக் கொடுப்பார் என காத்திருந்த வேளையில், மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், “அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்துதான் ஆகணும்” என்று கேப்ஷனில் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்ஷிதா-அர்ணவ் ஜோடி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் இருவருக்கும் வெளியில் நெகடிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |