ஒரே இரவில் வைரலாகிய பிக்பாஸ் 6 பிரபலம்.. நெட்டிசன்கள் கையில் சிக்கிய பதிவு
பிக்பாஸ் வீட்டில் அசல் கோளாறுவுடன் சேட்டை செய்து பிரபலமான நிவாஷினி தற்போது என்ன செய்கிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தியும், கடந்த வாரம் திருநங்கை அப்சராவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் ஜோடியாக உள்ளே வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வரும் நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பிரபலமான நிவாஷினி கிருஷ்ணன் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஒரே இரவில் வைரலாகும் பிக்பாஸ் பிரபலம்
தற்போது வந்திருக்கும் புதிய அப்டேட் பிரகாரம் நாம் யாருடைய போஸ்டை நமது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த விடயம் தெரியும்.
அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரும், தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பக்கத்தில் நிவாஷினியின் புகைப்படங்கள் மீண்டும் பகிரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த பதிவில், அல்ட்ரா மாடர்ன் போன்று போஸ் கொடுத்திருக்கிறார். இதனால் ஒரே இரவில் நிவாஷினி செம டிரெண்ட்டிங்கில் இருக்கிறார்.
சிங்கப்பூரை சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான நிவாஷினி பிக்பாஸ் வீட்டிற்குள் அசல் கோளாறுவுடன் செய்த அலப்பறை காரணமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
