தாலி கட்டிய பிறகு பாவனியின் உண்மை முகத்தை உடைத்த அமீர்! ஷாக்கான தொகுப்பாளினி பிரியங்கா
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பாவனி ஜோடிக்கு திருமணம் நடத்துவது போல அண்மையில் ப்ரோமோ வெளியானது.
நிஜமாகவே இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால், அது நடனத்திற்காக அமைக்கப்பட்ட காட்சி என்பது பின்னர் தான் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பாவனியிடம் பிடிக்காத விடயங்களை அமீரும், அமீரிடம் பிடிக்காத விடயங்களை பாவனியும் மாறி மாறி நடுவர்களிடம் கூறியுள்ளனர்.
அதில் நடன பயிற்சியின் போது தொகுப்பாளினி பிரியங்காவின் அழைப்பு வந்தால் பாவனி ஓடி விடுவதாக அமீர் கூறுகின்றார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று குறிப்பிடுகின்றார். இதனை பார்த்த தொகுப்பாளினி பிரியங்கா ஷாக்காகியுள்ளார்.