கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் துஷார் வெளியாகிய நிலையில், அடுத்தாக முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன் மற்றும் துஷார் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.
அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா?
இந்த நிலையில், நான்காவது வாரமான இன்றைய தினம் டபுள் எவிக்ஷன் எனக் கூறப்பட்டது. இதன்படி, துஷார் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
இவர் வெளியே செல்லும் பொழுது அரோரா, கம்ருதீன் மேல் சாய்ந்து அழும் காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் மேடையில் பேசிய துஷார், “அரோரா எனக்கு நல்ல நண்பர் மாத்திரமே, அதை பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம்..” என கூறியவுடன், பதில் கொடுத்த விஜய் சேதுபதி, “ உனக்கு வாயில தான் பிரச்சினை..” எனக் கலாய்க்கும் வகையில் தைரியம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து அடுத்தாக சீரியல் நடிகர் பிரவீன் வெளியேறவிருக்கிறார். இவரின் கடந்த சில நாட்களாக சரியாக விளையாடத காரணத்தினால் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இந்த செய்தியை பார்த்த பலரும் ரம்யா ஜோ வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |